السبت، ٨ كانون الأول ٢٠١٢

உந்தன் பிடியில் ஓர் உலகம் மற்ற யாரையும் சொல்லவில்லை என் தாயை தான் சொன்னேன்
என் தாயின் இடத்தில் தான் என் உலகம் 

என் தாய் சொன்னது 
என்னிடம் உன்னை தவிர வேறு யாரும் இல்லை 
நான் சென்ற பிறகு உன்னிடம் என்னை தவிர வேறு யாரும் இல்லை 

எங்கு சென்றாலும் அம்மா என்னும் ஒளி கேட்டு கொண்டே இருக்கும் 

ஒவ்வொரு நிமிடமும் நம்மை உணர வைப்பது மட்டும்மல்லாமல் அம்மாவின் நினைவை மலர வைக்கும் தீபம்மும் அது 






அன்பெனும் இல்லம் 
தாயின் உள்ளம் 
கொட்டும் நீரும் கை தட்டும் கடலும் 
உன் பெயரை சொன்னால் 
விட்டு விடுவேன் என்று 
காற்றின் வழியில் உன் அருகே என்றும் வருவேன் 
நொடி முல்லாய்  என் கால்கள் உன்னை வளம் வர 
என் நாடி துடிப்பும் உனக்காக தாலாட்டு பாடும் அம்மா !
எந்தன் கண்களின் வழியில் காணும் ஒளியில் 
உனக்கான தூறல் கூட சாரல் ஆகட்டும் அம்மா !!!

தெய்வம் என்பது வெறும் பெயருக்காகத்தான் 
தாய் இருக்கையிலே !!!! என்பதை இதன் மூலம் சொல்ல விரும்புகிறேன் 

தாயின் கோபம் கூட அன்புதான் என்பதற்கு ஒரு குட்டி கதை 

நான் எப்போதும் cricket  விளையாடுவதற்காக எண் வீட்டிற்கு அருகில் உள்ள பள்ளிகூடத்திற்கு செல்வேன் அங்கு எப்போதும் போல் நானும் என் சக நண்பர்களும் விளையாடி கொண்டிருந்தோம் என் அம்மா முன்னதாகவே   விளையாடவெல்லாம்  போக கூடாது என்று சொல்லிருந்தும் நான் விளையாட போனேன் எப்பவும் போல விளையாடி கொண்டிருக்கும் போது  keeper catch அவுட் என்று சொல்ல நான் அவுட் ஆகவில்லை என்று குரலிட எனக்கும் என் நண்பனுக்கும் வாக்குவாதத்துடன் சண்டை ஏற்பட்டது உடனே அவன் கல்லை தூக்கி எரிய அந்த கல் என் தலையில் பட ரத்தம் வந்தது என் அருகில் உள்ள நண்பர்கள் ஓடிபோய் எண்கள் வீட்டில் சொல்லிவிட்டார்கள் என் அம்மா உடனே கதறி அடித்து ஓடிவந்தார்கள் வந்து அவனை தான் அடிப்பார்கள் என்று பார்த்தேன் என்னை போட்டு  அடிஅடின்னு அடிச்சிட்டார்கள் இனிமேல் விளையாட போவ போவ என்று அப்போது எங்க அம்மாவிடம் சொன்னேன் அம்மா அவன் தான் அடிச்சான் நான் அடிக்கவில்லை என்று இருந்தும் திட்டு முடியவில்லை இதுக்கு பேருதான் பாசம் என்று எனக்கு அன்று புரியவில்லை போக போக புரிந்தது .

பிழை இருந்தால் மன்னிக்கவும்.   

எனக்கு ஒரு கேள்வி  உங்களுக்கு பிடிதிருகிறதா?

என் அம்மாவின் பாசம் மீண்டும் வெளிப்படும் ............



மீண்டும் ஒரு கவிதை அம்மாவுக்காக மகன் 

இக்கதாபாத்திரத்தில் காற்றை அம்மாவாக ஊகித்தும் கதிரவனை அப்பாவாக ஊகித்தும் கடலை அவர்கள் குழந்தையாக ஊகித்தும் எழுதப்பட்டது

ஒரு போதும் உயிரே 
என்னை கிள்ளவில்லை 

கண்மூடும் உறவை 
எனக்கு சொல்லவில்லை 

வானம் சொல்லும் வெளிச்சங்கள் 
இன்னும் பிடிக்கவில்லை 

உன்னை என்றும் வருத்திகொண்டு
பசி ஏனும் வந்தபோதும்
மலையாக தூவ வைத்தாய்,
பாட வைத்தாய்,
பேசவைத்தாய்,
கை பிடித்து நடக்க வைத்தாய்
எந்தன் கண்ணுறங்க
மரம் செடி கொடிகள் யாவையும்
தாலாட்டு பாடவைத்தாய்

இடிவந்து இடித்த போதும்
புயலாக வீசியது ஏனோ

கரையில் உள்ள உறவை கண்டு
பெண் அலையாக தடுத்ததை கண்டேன்
(கரையலதாங்க எப்பவுமே கெட்டவங்க இருக்காங்க அதனால தான் எங்க அம்மா அவங்க கூட சேர வேண்டாம்னு சொன்னாங்க)

கதிரவனின் காதலை எண்ணி
எந்தன் கையை விட்டுவிட்டாய்

முழுநிலா சொல்லும் பேச்சை கேட்டு
எந்தன் பாசத்தை மறந்துவிட்டாய்
(முழுநில யாருமில்லைங்க சொந்தகாரங்க தாங்க )

சுவாசிக்க ஏதும் தெரியாமல்
இரவும் பகலும் வந்து போன வாழ்கையில்
இரவை மட்டும் காண்பேனென பாரவில்லை
உயிரே கண்மூடும் உறவை
சொல்ல மறுத்தது இதனால்தானோ
இன்றோ உன்னால் மனம்
கரை சேர துடிக்குதடி
(திடுதுப்புன்னு காற்று வீசாமல் போய்விட்டதுங்க)

பாதை ஏதும் தெரியாமல்
வானம் தந்த வண்ணத்தை - சுவாசிக்கிறேன்
இன்றோ வானம் பார்த்து
படகின் மேலே மிதக்கிறேன்

எந்தன் பாசம் யாரும் அறியாத
உப்பு நீராய் மாறிவிட்டேன் என
மனம் துடிக்கிறது
உயிரே நீ எனக்கு உயிரை தந்துவிடு
உயிரே நீ என்னை கூட்டி
சென்று விடு ................

(அடிகடி நான் கொவபடுவேனுங்க ஒரு கேள்வி கொஞ்சி கொஞ்சி பேசினால் தான் பாசமா கோவபட்டால் பாசம் இல்லையா சொல்லுங்க)


ليست هناك تعليقات:

إرسال تعليق